Saturday, November 28, 2020

தந்தையின் வழியில் நான்

 தொலைந்து போன நாட்களில் விளைந்தவையெல்லாம் கவிதையாய் உங்கள் பார்வைக்கு என் தந்தையின் வழியில் படைக்கின்றேன் பாருங்கள்

பகிருங்கள்.... உடன்

உருப்படியான தகவல்களுடன்...

என் தந்தை தொடங்கி வைத்த இந்த பாதையில் நான் என் பயனத்தை தொடங்கி உள்ளேன்.



Thursday, August 19, 2010

Sunday, April 26, 2009

ஐ.பி.எல். கூத்து

அப்பாடா, இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி எல்லா இந்தியர் மற்றும் தமிழர்களுக்கும் இருந்த எல்லாவிதமான பிரச்சினைகளையும் தீர்த்து சகல சவுபாக்கியங்களையும் கொடுத்துவிட்டது. விவசாயி, நெசவாளர், தொழிலாளர் போன்ற எல்லா வர்க்க மக்களுக்கும் நிறைந்த செல்வத்தையும் கொடுத்து வறுமையை ஒழித்து இன்பமாக வாழ வழிவகை செய்து விட்டது. இனி, ஜனங்க எல்லாரும் தத்தம் குடும்பங்களோடு வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக இருக்கலாம். பி.சி.சி.ஐ. தலைவராய் இருக்குற நம்ம விவசாய மந்திரி இந்த வருஷம் தெ. ஆப்பிரிக்கா போகலைங்கறது மட்டும் வருத்தமா இருக்கு. தேர்தல் இருக்குல்ல, அதனால போக முடியாம இருந்திருக்கும். பரவாயில்லை. அடுத்த ஐ.பி.எல்.கு போயிடுவாரு. ஏன்னா, அவரு போயி ஐ.பி.எல்.ல நடத்துனதான இங்க நம்ம விவசாயிங்க எல்லாம் சுகமா இருக்க முடியும். அதனால அவரும் அவர் மகளும் ஜெயிக்க வழி பாருங்கப்பா. இதுல அவரு பிரதமரா வேற வரணும்னு நினைக்கிறாரு. ரொம்ப நல்ல இருக்குப்பா. வாழ்க ஜனநாயகம்.